Home செய்திகள் விஜயிடம் 2-ம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவு..!! நடந்தது என்ன.? முழு விவரம் உள்ளே..!!

விஜயிடம் 2-ம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவு..!! நடந்தது என்ன.? முழு விவரம் உள்ளே..!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், பிரபல நடிகர் விஜயிடம் மத்திய புலனாய்வுத் துறையினர் (CBI) இன்று நடத்திய இரண்டாம் கட்ட விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக, இன்று (ஜனவரி 19) விசாரணைக்கு

ஆஜரான நடிகர் விஜயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5½ மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில், சம்பவம் தொடர்பான பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

விசாரணைக்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே கடந்த ஜனவரி 12-ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது சுமார் 7 மணி நேரம்

சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இரு கட்டங்களிலாக இதுவரை மொத்தம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

41 அப்பாவிகள் உயிரிழந்த இந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Exit mobile version