இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் டிராவிட் விட்டுச்சென்ற உலகக் கோப்பை சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட மோசமான சாதனைகளைபதிவு செய்துள்ளது.
உன்னால என்ன பண்ண முடியுமோ..” என்று சவால் விடும் தொனியில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கம்பீரின் அணுகுமுறை, களத்தில் எதிர்மறையான முடிவுகளையே தந்துள்ளது.
அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சந்தித்த சறுக்கல்கள், கடந்த பல தசாப்தங்களாக இந்திய கிரிக்கெட் கட்டி எழுப்பிய கோட்டையைத் தகர்ப்பது போல் அமைந்துள்ளது…
