நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கும் விவகாரம் தொடர்பாக, திரைப்பட தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.முன்னதாக, இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, திரைப்பட தணிக்கை வாரியம் (Censor Board) சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸா தலைமையிலான அமர்வில் இன்று பட்டியலிடப்பட்டுள்ளது.
காலை சுமார் 11.30 மணியளவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை வாரியத்தின் இந்த மேல்முறையீட்டு வழக்கின் முடிவு, படத்தின் வெளியீட்டில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

