தங்கம் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று அதன் விலை யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களையும், நகை பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 வரை அதிகரித்துள்ளது.இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.13,610-ாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.1,08,880 என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.ஏற்கனவே தங்கம் விலை ஒரு லட்ச ரூபாயைக் கடந்து விற்று வரும் சூழலில், இன்றைய திடீர் விலை ஏற்றம் திருமணத் தேவைகளுக்காக நகை வாங்குவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த விலையேற்றம் வரும் நாட்களிலும் தொடருமா அல்லது குறையுமா என்ற கலக்கத்தில் பொதுமக்கள் உள்ளனர்…

