Monday, March 2, 2026
No menu items!

இசைஞானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – மத்திய அரசு அறிவிப்பு.!!

இந்தியத் திரையிசையின் ஜாம்பவானும், இசைஞானி என்று போற்றப்படுபவருமான இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு, உயரிய விருதான ‘பத்மபாணி விருது’ (Padmapani Award) அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவர் ஆற்றியுள்ள வாழ்நாள் சாதனைகளைக் கௌரவிக்கும் விதமாக இந்தத் தேர்வானது நடைபெற்றுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, வரும் 28-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜா அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும்,

இசையமைத்து சாதனை படைத்துள்ள இளையராஜாவின் இசைப் பயணத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News