கடந்த, ஆண்டிற்கு முன்பாக விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கிய போது பலரும் இவரை விமர்சித்து வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜயுடன் சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற சூழ்நிலையில் பலரும் இந்த கட்சியில் இணைந்து வருகிறார்கள். அப்படி சமீபத்தில் அதிமுகவில் பல வருடங்கள் இருந்த செங்கோட்டையன் என்பவர் இணைந்தது
மிகப்பெரிய ஒரு வெற்றியாக இந்த கட்சிக்கு அமைந்துவிட்டது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட 90% மாவட்ட செயலாளர்கள் தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நிர்வாகிகள் பன்னீர்செல்வம் விஜயுடன் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…









































