தற்போது தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரான விஜய் அரசியல் களத்தில் இறங்கியதிலிருந்து சூடு பிடித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சிக்காரர்களை மோசமாக விமர்சித்து வந்த நிலையில் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் விஜய்யையும் சீமானையும் விமர்சித்துள்ளார் .
அந்த வகையில் அவர் கூறியதாவது விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்றும் ஒருவர் திமுக கட்சியை வீழ்த்துவதற்காகவும் மற்றொருவர் தமிழ் தேசியம் என்ற பெயரில் ஏமாற்றி விடலாம் என்று கணக்கு போட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான திருமாவளவன்.
அது மட்டுமல்லாமல் எனக்கு பதவியாசை இருந்திருந்தால் எப்போதே தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரான விஜய்யின் பின்னால் போயிருப்பேன் என்றும் என்னைப் பொருத்தவரை எங்களுக்கு கொள்கைதான் முக்கியம் என்று கூறியுள்ளார் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் அவர்கள்.








































