நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சில மக்களுக்கு இயற்கையின் நற்குணங்களை பற்றி தெரிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்காக பல மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பவர்கள் இயற்கை முறையை மறந்து விடுகிறார்கள். அந்த வகையில் முருங்கை இலையில் உள்ள அதிசயங்கள் பற்றிய உண்மை வெளியாகி உள்ளது .
அந்த வகையில் தினமும் காலையில் ஒரு டம்ளர் முருங்கை தண்ணீர் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துமாம் ,சளி இருமல் போன்ற நோய்களை கிட்டவே நெருங்க விடாதாம் . அதோடு நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், மலச்சிக்கல்களை தடுத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு முருங்கை இலை நீர் பசியை குறைப்பதன் மூலம் உடல் எடையை சீக்கிரம் குறைப்பதற்கும் உதவுகிறது. குறிப்பாக நீரழிவு நோயாளிகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த முருங்கை இலை நீர் அதிகம் உதவுகிறது என்று கூறப்படுகிறது …










































