பொதுவாகவே கிரிக்கெட் என்றால் அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் தனி பிரியம் என்று தான் சொல்ல வேண்டும் .அதிலும் குறிப்பாக சிறப்பாக விளையாடும் வீரர்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த வகையில் ரசிகர்கள் மறக்க முடியாதவாறு செய்துள்ளார் ஒரு வீரர் .
அந்த வகையில் சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் கம்போடியா அணி மற்றும் இந்தோனேஷியா அணி விளையாடியது . இந்தப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கெடே பிரியாண்டனா ஒரே ஓவரில் 5 விக்கெட் களை வீழ்த்தி புதிய உலக சாதனை செய்துள்ளார் .
இதற்கு முன்பு பல கிரிக்கெட் வீரர்கள் அதிகபட்சமாக நான்கு விக்கெட்களை கைப்பற்றிய நிலையில் இந்தோனேசியா வீரர் கெடே பிரியாண்டனா ஒரே ஓவரில் 5 விக்கெட் களை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்…










































