பொதுவாகவே சினிமாவை பொருத்தவரை நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளம் நடிகைகளுக்கும் இருக்கும் . அது காலம் காலமாகவே தொடர்ந்து வருகிறது . அந்த வகையில் ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் , நடிகைகளுக்கு ஒரே சம்பளம் இருந்தாலும் தற்போது நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைந்த சம்பளம் தான் கொடுக்கப்படுகிறது .இப்படி இருக்கும் நிலையில்,
தமிழ் சினிமாவில் பணக்கார நடிகையாக இருப்பது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது வேறு யாருமில்லை “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா தான். “ஐயா” படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் .தற்போது ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடி சம்பளம் வாங்கி வரும் ,
நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு “183 கோடி” இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது . குறிப்பாக இவருடைய சொத்து மதிப்பு முன்னணி நடிகர்களுக்கு இணையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்த வரிசையில் தான் அனுஷ்கா ,தமன்னா, சமந்தா,திரிஷா போன்ற நடிகைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…











































