அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .குறிப்பாக அரசியல் களத்தில் விஜய் இறங்கியதில் இருந்தே பல கட்சிகள் அலறிக் கொண்டிருக்கிறது . அது மட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய்க்கு ஆதரவாக அதிமுக கட்சியின் மூத்த அமைச்சரான செங்கோட்டையன் தவெகாவில் இணைந்தார்.
இவர கட்சியில் இணைந்தது விஜய்க்கு மிகப்பெரிய பலம் என்று பேசப்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் இவரைத் தொடர்ந்து ஓபிஎஸ் அவர்களும் தவெகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ஈபிஎஸ் உடன் இணைந்து பயணிக்க வேண்டாம் என்று நினைக்கும் ஓபிஎஸ் தவெகவுடன் கூட்டணி வைத்தால்,
கட்சியில் தனக்கென ஒரு செல்வாக்கு அதிகரிக்கும் என்று கணக்குப் போட்டுள்ளாராம் . இதனால் ஓபிஎஸ் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உறுதி செய்துள்ளார்…









































