தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த படம் ஜனவரி ஒன்பதாம் தேதி அன்று திரையரங்கில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஹச் வினோத் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூசாவை நடிக்க வைத்துள்ளார்.
இவரை திறந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், விஜயின் இது கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்த சிலரும் படம் சிறப்பாக வந்துள்ளதாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜனநாயகன். படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கி இருந்த இதுவரை சுமார் 6 கோடி வரை வசூல் செய்துள்ளது இனி வரும் நாட்களில் படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூல் செய்து விடப் போவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், பொறுத்திருந்து படத்தை பார்த்துவிட்டு படத்தைப் பற்றி என அடுத்தடுத்து விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்…











































