பொதுவாகவே எத்தனை வயதானாலும் “இளமை” என்ற விஷயம் இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் அதிகம் இதை நினைப்பார்கள் . காரணம் ஆண்களை விட பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிலேயே இளமை தோற்றத்தை இழந்து விடுகிறார்கள்.அந்த வகையில் அவர்களுக்காக தற்போது ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்று கூற உள்ளோம்.
அந்த வகையில் முகத்திற்கு பொலிவு கிடைக்க பல கெமிக்கல் சாதனங்களை பயன்படுத்தி வரும் பெண்களுக்கு ஒரு இயற்கை முறையான பேஸ்புக் ஒன்று உள்ளது . அதற்கு தேவையான பொருள் மஞ்சள் ஒரு ஸ்பூன், தயிர் இரண்டு ஸ்பூன். முதலில் தயிரை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து விட்டு அதில் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
இதன் பின்பு முகத்தில் அதை நன்றாக தடவி காய வைக்க வேண்டும் . காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும் .இப்படி இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் 70 வயதிலும் இளமையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது…











































