தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் இருக்கிறார் நடிகர் சரத்குமார் . ஆரம்ப காலக்கட்டங்களில் வில்லனாக நடித்தாலும் பின்னர் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் ஹீரோவாக கலக்கி கொண்டு வந்தார் . தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான,
டியூட், கொம்பு சீவி போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் சரத்குமார். இப்படி இருக்கும் நிலையில் நான் 150 வயது வரை வாழ்வேன் என்று கூறியிருந்தார் . அதை பலரும் கிண்டல் செய்திருந்தார்கள். ஆனால் ஜப்பானில் 130 முதல் 140 வயது வரை மக்கள் வாழ்கிறார்களாம். அப்படி இருக்கும் போது நம்மால் ஏன் முடியாது என்று,
கேள்வி எழுப்பினார் சரத்குமார் . அதோடு முறையான ஒழுக்கம், மனக்கட்டுப்பாட்டு இருந்தால் இது சாத்தியம் என்றும், 70 வயதிலும் என்னால் பளு தூக்க முடியும் என்றால் அடுத்த 30 ஆண்டுகளும் என்னால் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்…











































