பெண்களே அழகு தான் அதிலும் அவர்களுடைய கருமுடி பேரழகு என்றுதான் சொல்ல வேண்டும் . ஆனால் முடி உதிர்தல் ,வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் பெண்கள். குறிப்பாக அடர்த்தியான நீளமான கூந்தலை பெற வேண்டும் என்று பல பெண்கள் முயற்சி செய்து வருகின்றனர் . அதற்கான ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை பார்க்கலாம் .
இதற்குத் தேவையான பொருட்கள் அரிசி 2 ஸ்பூன், செம்பருத்தி இலை 5 , செம்பருத்தி பூ 4 , விளக்கெண்ணெய் 1 ஸ்பூன், தண்ணீர் 3 கப் . இதை செய்யும் முறையானது ஒரு பாத்திரத்தில் முதலில் அரிசியை சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவி வேக வைக்கவும், அப்படி அந்த அரிசி வெந்ததும் செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்திப் பூவை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை ,
கொதிக்க வைக்கவும் , இதன் பிறகு அதனை நன்றாக ஆற வைத்து ஒரு கிண்ணத்தில் வடிகட்டி அதில் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இதன் பிறகு உச்சந்தலை முழுவதும் இதை தடவி நன்றாக மசாஜ் செய்யவும் , பின்னர் ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு தலை முடியை நன்றாக அலசி விட வேண்டும் . இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்…











































