பொதுவாகவே புதிதாக வரும் சட்டங்கள் வசதியானவர்களுக்கு சாதகமாக இருக்குமே தவிர ஏழைகளுக்கு சாதகமாக இருப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி பல புதிய சட்டங்களை போட்டு ஏழைகளை அழித்து வருகின்றனர் . அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து சிறு வியாபாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை .
அது என்னவென்றால் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் இனிமேல் உரிமம் பெற்றுக்கொண்டு தான் விற்க வேண்டும் என்று கூறியுள்ளனர் உணவு பாதுகாப்பு துறை. குறிப்பாக சைக்கிள் மற்றும் பைக் எதில் சென்றாலும் அந்த உரிமம் கட்டாயம் இருக்க வேண்டுமாம். இதைப் பார்த்த ரசிகர்கள் இடியாப்பம் விற்பவருக்கே இடியாப்ப சிக்கலா என்று கூறி வருகின்றனர்…











































