தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பல கட்சிகள் எந்த கட்சிகளும் கூட்டணி வைக்க போகிறார்கள் என்று முடிவுகள் அடுத்தடுத்து அறிவித்து வரும் நிலையில் பாமக மற்றும் தேமுதிக விடுத்த கட்சிகள் இதுவரை எந்த ஒரு கூட்டணியும் அறிவிக்காமல் இருந்து வந்துள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் பிரேமலதா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து கண்டிப்பாக அறிவிப்பை வெளியிடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக சுமார் எட்டு தொகுதியில் ஒதுக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், பிரேமலதா அதை மறுத்துவிட்டார் இதை தொடர்ந்து ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிகவின் மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டின் போது தான் நாங்கள் இந்த கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று தங்களுடைய நிலைப்பாடு வெளியிடுவோம் என்று பிரேமலதா தெரிவித்திருந்தார்…








































