நாட்டில் இருக்கும் பல பிரச்சனைகளில் தீர்க்க முடியாத பிரச்சனையாக கருதப்படுவது முடி உதிர்வு தான் .குறிப்பாக இளமையில் முடி உதிர்வது பல பேருக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும் .குறிப்பாக முடி உதிர்வை குறைப்பதற்காக பல மருத்துவர்களுடன் ஆலோசனை செய்பவர்களும் உண்டு . இப்படி இருக்கும் நிலையில் இயற்கையின் முறையில் முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்துவதற்கு,
ஒரு ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம் .அதற்கு தேவையான பொருட்கள் தேங்காய் ஒரு மூடி, வெந்தயம் 3 ஸ்பூன், முட்டை 1 . வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும், இதன் பிறகு தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய் பால் போல எடுத்துக் கொண்டு அதில் வெந்தயம் தேங்காய் பால் சேர்த்து,
நன்கு பேஸ்ட் போல அரைத்து பருத்தி துணியில் வடிகட்டி பிழிந்து கொள்ளவும் ,பின்னர் முட்டையில் உள்ள வெள்ளை கருவை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி தலைமுடியின் உச்சி முதல் வேர்வரை பூசவும், 20 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு தலை முடியை அலசி கொள்ளவும் ,இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்குமாம்…











































