பொதுவாகவே பஸ் கட்டணத்தை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வது ரயில் பயணத்தில் மட்டும் தான். ஆனால் தற்போது ரயில் டிக்கெட் விலையும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஊழியர்களின் சம்பள மற்றும் பராமரிப்பு செலவுகள் மற்றும் ரயில்வே அமைச்சகம் செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் 500 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் நான் – ஏசி பயணிகளுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாம் . அது மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான் – ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாம் .
ஆனால் சீசன் டிக்கெட்கள் மற்றும் புறநகர் ரயில்களில் எந்த கட்டண மாற்றமும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த புதிய கட்டண உயர்வு ராஜஸ்தானி ,சதாப்தி ,வந்தே பாரத் ,ஜன சதாப்தி போன்ற குறிப்பிட்ட ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது…










































