சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் அதிகம் பயன்படுத்துவதாலும், சரியாக தூங்காததாலும் கண்ணுக்கு கீழே கருவளையங்கள் தோன்றுகிறது. இந்த கருவளையங்கள் முகத்தின் அழகியே கெடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதை முற்றிலும் மறைய வைக்க செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வதும் தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் அந்த கருவளையம் நிரந்தரமாக நீக்க இயற்கை முறை ஒன்று உள்ளது .அதற்கு தேவையான பொருட்கள் ஆரஞ்சு 1 ,மஞ்சள் அரை ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன். ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு ,மஞ்சத்தூள் ,தேன் ஆகியவற்றை,
நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும் . இதன் பிறகு அந்த பேஸ்டை கருவளையம் உள்ள இடத்தில் தடவி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும் . இதன் பிறகு குளிர்ந்த நீரால் அதை கழுவ வேண்டும்…











































