பொதுவாக எந்த நாடாக இருந்தாலும் பெண்கள் அதிகமாக தங்க நகைகளை விரும்பி வாங்கி அணிவித்து வருவது ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், சில வருடத்திற்கு முன்பாக சராசரியாக 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இருந்த ஒரு சவரன் தங்க நகை இன்று சுமார் ஒரு லட்சத்திற்கும்
அதிகமாக விற்கப்பட்டு வருவதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இதனால் நடுத்தர மக்களும் அதற்கு கீழ் இருக்கும் மக்களும் தங்கத்தின் மீது இருக்கும் ஆசையே போய்விடும் என்று தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சென்னையில்
இன்று 22 கேரட் ஆவண தங்கத்தின் ஒரு கிராம் இன்று இருபது ரூபாய் விழுந்து 12,890க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு சவரன் இன்று 1,03,320 க்கு விற்கப்பட்டு வருகிறது இதை தொடர்ந்து வெள்ளியும்
அதற்கு சமமாக சுமார் என்று ஒரு கிராமுக்கு ஒன்பது ரூபாய் உயர்ந்து ஒரு கிலோவுக்கு சுமார் 9000 வரை வெள்ளி விலை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை இரண்டு லட்சத்தி 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது…











































