தங்கத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் மக்களுக்கு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது . மேலும் தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச பொருளாதார மாற்றங்களும் காரணமாக கூறப்படுகிறது . குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு ஒரு பவுன் வாங்க முடியவில்லை என்றாலும் ,
ஒரு கிராம் அல்லது இரண்டு கிராம் வாங்கும் அளவிற்கு மக்களுக்கு தகுதி இருந்தது. தற்போது ஒரு கிராம் வாங்குவதே பெரிய போராட்டம் என்பது போல ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை . அந்த வகையில் இன்று ஒரே நாளில்,
தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12,890 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 1,03,120 ரூபாய் என்று உயர்ந்துள்ளது. இந்த செய்தி நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…











































