“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்று முன்னோர்கள் ஒன்றும் சும்மாக சொல்லி வைக்கவில்லை. இது எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு என்பது தன உண்மை . குறிப்பாக ஒரு நடுத்தர நிலையில் இருந்து முன்னேற்றமான நிலைமைக்கு சென்றால் சுற்றியுள்ளவர்கள் பொறாமை படுவது எதார்த்தம் தான். ஆனால் அதுதான் கண் திருஷ்டியாக மாறுகிறது .
இப்படி இந்த கண் திருஷ்டியால் அவதிப்படும் குடும்பங்கள் ஏராளம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு ஒரு பரிகாரம் உள்ளதாம் .அது என்னவென்று பார்க்கலாம், ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு மா இலையில் வேப்பெண்ணையை முழுமையாக தடவி விட்டு அந்த இலையை உங்கள் வீட்டின் ஒரு மூலையில்,
வைத்து விடுங்கள் . இது அந்த நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும் ,பிறகு அன்று இரவு தூங்குவதற்கு முன்பு அந்த இலையை எடுத்து வாசலில் கற்பூரத்தை வைத்து எரித்து விடுங்கள் ,உங்கள் வீட்டின் மீது இருக்கும் கண் திருஷ்டி நீங்கிவிடுமாம்…











































