தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் விஜய் அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இன்று மலேசியாவுக்கு சென்று கொண்டிருக்கும்
வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் கடைசி படம் என்பதால் இனிமேல் அவர் நடிக்கவே போவதில்லை என்று
சொன்ன ஒரே காரணத்தினால் தமிழக மக்கள் அனைவரும் படையெடுத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்று இசை வெளியீட்டு விழாவை பார்ப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் குவிந்துள்ளார்கள்.
இதனால் சென்னை விமான நிலையம் சந்தித்து போனது. நாளை இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்று பலரும் இப்போது ஆர்வத்துடன் இருந்து வரும் நிலையில் இந்த செய்தி பல ரசிகர்களுக்கு ஒரு குஷ்பம்சாக இருந்து வருகிறது…










































