வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இன்னும் 3 மூன்று மாதங்களில் வர இருப்பதால் அரசியல் களம் சற்று சூடு பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற விவாதமே பெரிய விஷயமாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் யாருடனும் கூட்டணி சேராமல் இருக்கும் விஜய்யை ,
கூட்டணிக்கு அழைத்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் விஜய் பற்றி கூறியதாவது, தனியாக நின்று ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நான் தம்பி விஜய்யிடம் மீண்டும் சொல்கிறேன் .
அனைவரும் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் . அப்போது தான் திமுகவை வீட்டுக்கு அனுப்ப முடியும் . மேலும் எங்களுடன் விஜய் கூட்டணி போட்டால் கூடுதல் பலமாக இருக்கும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்…









































