பொதுவாகவே நமது வீட்டு பூஜை அறைகளில் பலதரப்பட்ட கடவுளின் புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்து வருகிறோம். இது நல்ல விஷயமாக கருதப்பட்டாலும் சில நேரங்களில் கடவுளின் புகைப்படங்களை வைக்கும் இடத்தில் பிரச்சனை வருகிறது. அதாவது ஒரு சில கடவுளின் புகைப்படங்களை ஒன்றாக வைத்து வழிபடக் கூடாதாம். அது எந்தெந்த கடவுள்கள் என்று பார்க்கலாம் .
அந்த வகையில் அனுமன் மற்றும் சனி பகவானை அருகே அருகே வைத்து வழிபாடு செய்யக் கூடாதாம். காரணம் அனுமார் சனிபகவான் நமக்கு கொடுக்கக்கூடிய தாக்கங்களை குறைத்து விடுவாராம். இதனால் அருகே அருகே வைத்து வழிபடும்போது கடவுளின் ஆசிர்வாதம்,
நமக்கு கிடைப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் காளி தேவி ,துர்கா தேவி படங்களை லட்சுமி சரஸ்வதி விநாயகர் படங்களின் அருகே வைத்து வழிபாடு செய்யக்கூடாதாம். இந்த தவறை நீங்கள் செய்திருந்தால் இப்போதே மாற்றி விடுங்கள் …











































