வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவுள்ள சொர்க்க வாசல் தரிசனம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வருகின்ற டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் தரிசனத்திற்கான முறையான டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் டிக்கெட் பெறாத பக்தர்கள் திருப்பதிக்கு வந்து ஏமாற்றமடைய வேண்டாம் என்றும், தரிசன டிக்கெட் இல்லாதவர்கள் இந்த நாட்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.











































