மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்து இன்று (ஜனவரி 6) உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளின் அதிரடி கருத்துகள்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, “அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசு செயல்படக்கூடாது” என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய தீபத்தூண் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இடத்திலேயே அமைந்துள்ளது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனி நீதிபதி உத்தரவு செல்லும்: ஏற்கனவே இந்த விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது. அதேவேளையில், அங்கிருக்கும் தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்க, முந்தைய உத்தரவுகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.











































