கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வரவிருக்கும் டாட்டா ஐபிஎல் (Tata IPL) கிரிக்கெட் தொடருக்காக, கூகுள் நிறுவனத்தின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தளமான ‘ஜெமினி ஏஐ’ (Gemini AI)
உடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை குறித்து பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ. 270 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாட்டிற்கும், ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூகுள் ஜெமினி ஏஐ உடனான இந்த ஒப்பந்தம், நடப்பு சீசன் தொடங்கி
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தொழில்நுட்ப நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது…

