தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், வீட்டை விட்டு வெளியே வந்து அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
“த.வெ.க தலைவர் விஜய் முதலில் தனது வீட்டை விட்டு வெளியே வந்து மக்களைச் சந்திக்க வேண்டும். அதை விடுத்து, வெறும் வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு ‘கொள்கை எதிரி’, ‘புடலங்கா எதிரி’ என்றெல்லாம் பேசுவது ஏற்புடையதல்ல,”
என்று சாடினார். விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் “கொள்கை எதிரி” மற்றும் “அரசியல் எதிரி” யார் என்பது குறித்து பேசியிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாகவே
டி.டி.வி தினகரன் இந்த “புடலங்கா எதிரி” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும்
செயல்பாடுகள் குறித்து மூத்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தினகரனின் இந்த நேரடி விமர்சனம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

