Monday, April 13, 2026

மணிப்பூரில் 260 பேர் பலி, இதுதான் லட்சணமா.? பாஜகவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!!

பாஜக தலைமையிலான மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மணிப்பூர் வன்முறை மற்றும் நாடு தழுவிய போதைப்பொருள் விநியோகம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை

முன்வைத்தார் மணிப்பூர் மாநில நிலவரம் குறித்துப் பேசிய முதலமைச்சர், “பாஜக ஆளும் மணிப்பூரில் இதுவரை 260 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஏன் பாஜக அரசால் இன்னும் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை?”

என்று கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சுட்டிக்காட்டிய அவர், “இதுதான் லட்சணமா?” என காட்டமாக வினவினார். மேலும், போதைப்பொருள் விவகாரம் குறித்தும் பேசிய அவர், “இந்தியா முழுமைக்கும்

விநியோகிக்கப்படும் போதைப்பொருட்கள், பாஜக ஆளும் இரண்டு மாநிலங்களில் இருந்துதான் வருகின்றன” என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். முதலமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News