ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், தனது கடைசி டெஸ்ட் தொடரில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பேகி கிரீன்’ (Baggy Green) தொப்பி, சுமார் 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்,
இந்தத் தொப்பியை கடந்த 75 ஆண்டுகளாக மிகப் பத்திரமாக பாதுகாத்து வந்தது ஒரு இந்தியக் குடும்பம் என்பதுதான். வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பேகி கிரீன்’: 1948-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத காரணத்தால் அந்த அணி ‘தி இன்வின்சிபிள்ஸ்’ (The Invincibles) என்று அழைக்கப்பட்டது. அந்தத் தொடரின் போது டான் பிராட்மேன் அணிந்திருந்த தொப்பிதான் இது.
இந்தியக் குடும்பத்தின் பிணைப்பு: 1959-ம் ஆண்டு டான் பிராட்மேன், தனது நண்பரும் அண்டை வீட்டாரருமான பி.கே. கோவிந்தன் (P.K. Covindan) என்ற இந்தியருக்கு இந்தத் தொப்பியைப் பரிசாக அளித்துள்ளார்.
கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தத் தொப்பியைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தனர். சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் குடும்பத்தினர் தற்போது இந்தத் தொப்பியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
சாதனை ஏலம்: ஆன்லைனில் நடைபெற்ற இந்த ஏலத்தில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் பீட்டர் ஃப்ரீட்மேன் என்பவர் இதை வாங்கியுள்ளார். வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட இதன் மதிப்பு சுமார் 4.2 கோடி ரூபாயாகும் (சுமார் 4,79,700 ஆஸ்திரேலிய டாலர்கள்)…

