Sunday, April 12, 2026

“பெண்கள் தான் முதுகெலும்பு” – ஆண்களுக்கு நிகராக உயர முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

“பெண்களே இந்தச் சமூகத்தின் உண்மையான முதுகெலும்பு,” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சிறப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பெண்கள் முன்னேற்றம் குறித்து மிகத் தௌவாகப் பேசினார்.

“பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கக்கூடாது. அவர்கள் ஆண்களுக்கு இணையாக வெளியே வந்து, அனைத்துத் துறைகளிலும் தங்களை நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிடப் பெண்களின் பங்களிப்பு அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, அரங்கில் இருந்த பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News