Monday, March 2, 2026
No menu items!

தனது மகனை ஹீரோவாக்கும் நடிகர் தனுஷ்..!! கஸ்தூரிராஜா குடும்பத்திலிருந்து புதிய ஹீரோ..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் முத்திரை பதித்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனுஷ் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு திரையுலகில் காலடி எடுத்து வைக்கவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமானார். அந்த வரிசையில் தற்போது தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்தப் பிரம்மாண்டமான அறிமுகப் படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வொண்டர்பார் (Wunderbar Films) தயாரிக்கிறது.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, தனது மகனின் அறிமுகப் படத்தை தனுஷே இயக்கவுள்ளார். இதன் மூலம் ஒரு தந்தையாகவும், இயக்குநராகவும் தனது மகனை செதுக்கும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். இந்தப் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தச் செய்தியை வைரலாக்கி வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News