Saturday, April 18, 2026

தங்கம் விலை அதிரடி சரிவு..!! இன்று சவரனுக்கு ரூ.7,600 குறைந்தது..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், உள்ளூர் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,600 வரை குறைந்து பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி நகை வாங்குவோரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,19,200-ஆகக் குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரும் நாட்களில் இந்த விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். விசேஷங்கள் மற்றும் திருமண சீசன் நெருங்குவதால், இந்த விலை சரிவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News