Friday, February 27, 2026
No menu items!

நட்புக்குக் கிடைத்த வெற்றி: மோடி-டிரம்ப் சந்திப்பால் இந்திய இறக்குமதி வரி குறைப்பு – முழு விவரம்..!!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வரியானது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த 7 சதவீத வரி குறைப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு

பெரும் நிம்மதியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் தமக்குள்ள ஆழமான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதை காரணமாகவே இந்த வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக

அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். “இந்தியா ஒரு சிறந்த நட்பு நாடு, பிரதமர் மோடியுடனான எங்களது நல்லுறவு இந்த சாதகமான முடிவுக்கு வழிவகுத்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதர பொருட்கள் மீதான சுமை குறைந்து, இரு நாடுகளின் பொருளாதாரமும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News