Wednesday, April 15, 2026

பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு வெளியேறியவர்கள்.. செங்கோட்டையனை சாடிய செல்லூர் ராஜா..!!

அதிமுக குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வரும் விமர்சனங்களுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜா இன்று காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜா, அதிமுகவிலிருந்து விலகி மாற்றுப்

பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களைக் கடுமையாகச் சாடினார். அப்போது அவர் கூறுகையில், “செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு” என மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், “செங்கோட்டையனை வேறு யாரும் சேர்த்துக் கொள்ளாத காரணத்தினாலேயே அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

அதிமுக தொண்டர்களின் வியர்வையில் உருவான பதவிகளையும், அதன் மூலம் கிடைத்த சுகங்களையும் அனுபவித்துவிட்டு, இப்போது கட்சியை விமர்சித்துக் கொண்டு வெளியேறியவர்களைப் பற்றிப் பேச தான் விரும்பவில்லை”

என ஆவேசமாகத் தெரிவித்தார். அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழலில், செல்லூர் ராஜாவின் இந்த ‘செல்லாக் காசு’ விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News