இந்தியத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது இவர் நடிப்பில் ‘ராமாயணா’ மற்றும் ‘Ek Din’ ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இதுமட்டுமின்றி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில், தீபிகா படுகோனுக்குப் பதிலாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55-வது திரைப்படத்தின் (D55) பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தனுஷ், சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகை சாய் பல்லவிக்கு சுமார் ரூ. 12 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த அதிரடி உயர்வு மூலம், இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளின் பட்டியலில் சாய் பல்லவி இடம்பிடித்துள்ளார்.
பொதுவாகக் கதைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுக்கும் சாய் பல்லவி, தற்போது வணிக ரீதியாகவும் தனது மார்க்கெட்டைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொடர் வெற்றிகள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் சாய் பல்லவியைத் தென்னிந்தியத் திரையையும் தாண்டி இந்திய அளவில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது…

