Wednesday, April 15, 2026

இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!! வங்கி மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கும் அபாயம்.!!

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 10 முன்னணி தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, வங்கிச் சேவைகள், பொது போக்குவரத்து மற்றும் அரசு அலுவலகப் பணிகள் இந்தப் போராட்டத்தால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். தமிழகத்திலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு இருக்கக்கூடும். வங்கிகள் மூடப்படுவதால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாகப் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News