Saturday, February 28, 2026
No menu items!

முதல்ல திரிஷா கிட்ட இருந்து வெளிய வாங்க..!! நடிகர் விஜய் பற்றி நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜய், “அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் கட்சிகளை ஸ்டாலினும், எடப்பாடியும் கையில் வைத்துள்ளனர்; என்னைப் போலப் புதிய கட்சி தொடங்கித் தேர்தலைச் சந்திக்க அவர்களுக்குத் துணிவிருக்குமா?” என திமுக, அதிமுக மற்றும் பாஜகவைச் சாடினார்.

இதற்கிடையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டச் சிக்கல்கள் காரணமாகப் பொங்கல் ரிலீஸைத் தவறவிட்டு, தற்போது மீண்டும் தணிக்கை குழுவிற்கு (Censor Board) அனுப்பப்பட்டுள்ளது. ஒருபுறம் பட ரிலீஸ் சிக்கல் இருக்க, மறுபுறம் விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

அப்போது அவர், “விஜய் அரசியல் அனுபவம் இல்லாதவர், அவர் இன்னும் வீட்டில் இருந்தே வெளியே வரவில்லை” என்று குறிப்பிட்டார். மேலும், “முதலில் அவர் திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும், அதன் பிறகுதான் மற்றவை நடக்கும்” எனத் தனிப்பட்ட ரீதியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமர்சனம் விஜய் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News