தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 ‘டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட்’ (Development Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பொதுப்பிரிவில் 159 இடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Degree) பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்; அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.32,000 ஊதியத்துடன், வங்கி ஊழியர்களுக்கான இதர சலுகைகளும் வழங்கப்படும்.
இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nabard.org என்ற இணையதளம் மூலம் வரும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கதற்கு கட்டணமாக எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100-ம், இதர பிரிவினருக்கு ரூ.450-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது…
