Monday, March 2, 2026
No menu items!

கிரிக்கெட்டில் புது வரலாறு.!! – முதலிடத்தில் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் 3-வது வீரராகக் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் நீண்டகால சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் 3-வது இடத்தில் களமிறங்கி 330 இன்னிங்ஸ்களில் 12,662 ரன்கள் எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி வெறும் 244 இன்னிங்ஸ்களிலேயே 12,676 ரன்களைக் குவித்து அந்தச் சாதனையைத் தகர்த்தெறிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா 9,747 ரன்களுடன் (238 இன்னிங்ஸ்) அடுத்த இடத்தில் உள்ளார். குறைந்த இன்னிங்ஸில் இந்த இமாலய இலக்கை அடைந்த விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News