Home வானிலை ஜில்லென்ற காற்று..!! ஆனால் ஒரு எச்சரிக்கை.! ஜனவரி 19 வானிலை நிலவரம்

ஜில்லென்ற காற்று..!! ஆனால் ஒரு எச்சரிக்கை.! ஜனவரி 19 வானிலை நிலவரம்

இன்று (ஜனவரி 19, 2026) சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் தெளிவாகவும், வறண்ட வானிலையுடனும் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20°C ஆகவும் பதிவாகும் என்பதால் பகல் பொழுது இதமாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு அறவே இல்லை.

இருப்பினும், காற்றின் தரம் (AQI 169) ‘மோசம்’ என்ற நிலையில் இருப்பதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் காலை நேர பயணத்தின்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வட மாநிலங்களில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிந்தைய இந்த வாரம் முழுவதும் வானிலை சீராகவும், இதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version