Monday, March 2, 2026
No menu items!

ஸ்டீவ் ஸ்மித்தின் அடுத்த பிளான் இதுதான்..!! லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் குறித்து அதிரடி பேட்டி..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித், தனது எதிர்கால கிரிக்கெட் பயணம் குறித்தும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய முதன்மையான இலக்கு. இதற்காகத் தொடர்ச்சியாக என்னால் முடிந்த

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். யாருக்குத் தெரியும்.. வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், டி20 உலகக் கோப்பை வாய்ப்புகள் குறித்துப் பேசிய

அவர், “டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட வேண்டும் என எனக்கு ஆசைதான். ஆனால், அதற்கான வாய்ப்பு இருப்பது போலத் தெரியவில்லை,” என்று எதார்த்தமான

சூழலையும் குறிப்பிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதே தனது தற்போதைய கனவு என்பதை ஸ்மித் உறுதிப்படுத்தியுள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News