Wednesday, April 15, 2026

ஆளுநர் உரைக்கு முற்றுப்புள்ளி.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!! முழு விவரம் இதோ..

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக, இனி சட்டப்பேரவை கூட்டத்தொடர்களில் ‘ஆளுநர் உரை’ தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர்

ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இது குறித்துப் பேசிய

முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவதே நமது முதன்மை நோக்கம். பல நேரங்களில் ஆளுநர் உரை என்பது வெறும்

சம்பிரதாயமாக மாறிவிடுகிறது அல்லது அரசின் கொள்கைகளுக்கு முரணான சூழல் நிலவுகிறது. எனவே, நிர்வாக வசதி மற்றும் கால விரயத்தைத் தவிர்க்கும் நோக்கில், இனி வரும் காலங்களில் சட்டப்பேரவையில் ஆளுநர்

உரை நிகழ்த்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.மேலும், இது தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்தும்

ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மாநில சுயாட்சி மற்றும் மக்களாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஆளும் கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில், எதிர்க்கட்சிகள் இது ஜனநாயக மரபுகளை மீறும் செயல் எனத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News