சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் நேற்று கொச்சி வந்தடைந்தனர்
பரபரக்கும் விமான நிலையம்: நேற்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து கொச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்து எளிமையாகக் காணப்பட்டார்.
கொச்சி விமான நிலையத்தில் அவரை வரவேற்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. விமான பயணத்தின் போது பிரபல பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமார், ரஜினிகாந்த் மற்றும் நெல்சனுடன் எடுத்துக்கொண்ட
செல்ஃபி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேரளாவில் எங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கிடைத்த தகவல்களின்படி,
இந்த இறுதிச்சட்டப் படப்பிடிப்பு கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி (Athirapilly Waterfalls) மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
முதல் பாகத்தில் வறண்ட மற்றும் தொழிற்சாலை பின்னணியில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பசுமையான மற்றும் பிரம்மாண்டமான
நீர்வீழ்ச்சி பின்னணியில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இது படத்தின் கிளைமாக்ஸ் அல்லது மிக முக்கியமான சண்டைக் காட்சியாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…

