Wednesday, April 15, 2026

அமெரிக்காவில் பலியான இந்திய மாணவி.. ரூ.260 கோடி இழப்பீடு அறிவிப்புக்கு 2 நாள் முன் தந்தை மரணம்..

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்தியப் பெண் உயிரிழந்த வழக்கில், மிகப்பெரிய இழப்பீடு அறிவிக்கப்பட்டும், அதைத் தெரிந்துகொள்ளும் முன்பே அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், போலீஸ் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக சுமார் ரூ.260 கோடி ($33 மில்லியன்) வழங்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இந்த நீதி கிடைத்தும் அந்த குடும்பத்தினரால் முழுமையாக ஆறுதல் அடைய முடியவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு வருவதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு, உயிரிழந்த பெண்ணின் தந்தையான கந்துலா ஸ்ரீகாந்த் (Kandula Srikanth) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவர் ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளின் இழப்பால் வாடிக்கொண்டிருந்த தந்தை, மகளுக்கான நீதி மற்றும் இழப்பீடு அறிவிக்கப்படும் செய்தியைக் கேட்காமலேயே உயிரிழந்தது, ஏற்கனவே துயரத்தில் இருந்த அக்குடும்பத்தை மேலும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News