Monday, March 2, 2026
No menu items!

திரும்பவும் முதல்ல இருந்தா ..?? வெற்றிமாறனால் மாட்டிகொண்டு முழிக்கும் சிம்பு ..!!

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனரான வெற்றிமாறன், தனது படங்களின் நேர்த்திக்காக அதிக மெனக்கெடுபவர். ஆனால், கதையை முழுமையாக முடிக்காமல் படப்பிடிப்பிற்குச் செல்வது மற்றும் மாதக்கணக்கில் படப்பிடிப்பை இழுடிப்பது போன்ற இவரது பாணி நடிகர்களைத் தயங்க வைப்பதாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் தாமதமானதற்கும், ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் நாட்களை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதற்கும் இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்திலும் இதே பிரச்சனை தலைதூக்கியுள்ளது. கபடி வீரராக சிம்பு நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நடந்து முடிந்தது. வரும் ஜனவரி 26-ம் தேதி அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில், இதுவரை எடுத்த காட்சிகளில் தனக்குத் திருப்தி இல்லை என்றும், அவற்றை மீண்டும் முதலிலிருந்து எடுக்க வேண்டும் என்றும் வெற்றிமாறன் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் ஏப்ரல் மாதம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்த சிம்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே படப்பிடிப்பிற்குச் சரியாக வரமாட்டார் என சிம்பு மீது ஒரு பெயர் உள்ள நிலையில், வெற்றிமாறனின் இந்தத் தாமதப் போக்கு கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News