Monday, March 2, 2026
No menu items!

“இந்தியா வருவதற்கு மறுப்பு.? உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வங்கதேசம் விதித்த அதிரடி நிபந்தனை..!!

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது குறித்து வங்கதேச அரசு தனது நிலைப்பாட்டை மிகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காக, இந்தியாவில் தங்களது அணி விளையாட வேண்டிய போட்டிகளை

இலங்கைக்கு மாற்றினால் மட்டுமே இந்தத் தொடரில் பங்கேற்போம் என்று வங்கதேசம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கையில்,

“எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கையாக உள்ளது,” என்று குறிப்பிட்டார். இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும்

வங்கதேச தரப்புக்கும் இடையே டாக்காவில் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை

தோல்வியில் முடிந்ததாகவும் விளையாட்டுத் துறை ஆலோசகர் அறிவித்துள்ளார். இதனால், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி பங்கேற்பது குறித்த இழுபறி நீடித்து வருகிறது. ஐசிசி இது குறித்து அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை கிரிக்கெட் உலகம் உற்று நோக்கி வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News