Friday, June 12, 2026

தமிழகத்தில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை தொடக்கம் – முதற்கட்டமாக 70 படைகள் இன்று முதல் அதிரடி ஆக்சன்..!!

மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 70 “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப் படைகள் முறைப்படி செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அதிரடிப் படைகள் அனைத்தும் இன்று முதல் தங்களின் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. பெண்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சிறப்புப் படைகள் தாராளமாகப் பயன்படுத்தப்படவுள்ளன.இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, செயல்பாட்டுக்கு வந்துள்ள ஒவ்வொரு படைப் பிரிவிலும் 2 பெண் உதவி ஆய்வாளர்கள் (SI) மற்றும் ஒரு காவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்துப் பணியில் முழு வீச்சில் ஈடுபடவுள்ளனர்.

முதல்வர் விஜய் அவர்களின் நேரடிப் பார்வையில், காவல்துறையின் நவீனமயமாக்கல் மற்றும் பெண் பாதுகாப்புத் திட்டங்களின் ஒரு முக்கியப் பகுதியாக இந்த ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ (Singappen Special Force) வடிவமைக்கப்பட்டுள்ளது. எசகுபிசகான குற்றச் சம்பவங்கள் எழும் போது, அவசரக் காலங்களில் பெண்கள் உடனடியாக உதவி பெறும் வகையில் அதிநவீனத் தொடர்பு சாதனங்கள் மற்றும் பிரத்யேக வாகனங்கள் இந்த ரோந்துப் படைகளுக்கு தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.

ஆபத்தான சூழல்களில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு மிக விரைவாகவும், துரிதமாகவும் சென்று உதவிகளை வழங்க ஏதுவாக இந்த தனிப்படைப் பிரிவினருக்குச் சிறப்புப் பயிற்சிகளும் முன்பே அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News